து வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு. ஆனால் அரசாங்கமே வருமானத்திற்காக மது விற்பனை செய்கிறது. இதனால் பலர் நிரந்தர குடிகாரர்களாக மாறி, லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிகின்றன. குடியினால் குடல்வெந்து நோய்களுக்கு ஆளாகி குடும்பத்தலைவர்கள் இறந்துபோவதால், விதவையான பெண்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது. விதவைகள் மட்டுமே வாழும் பகுதிகளாக பல தமிழக கிராமங்கள் மாறிவருகின்றன. மேலும் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ- மாணவிகளும் போதைக்கு ஆளாகி சீரழிகிறார் கள். இதற்குப் பெண்களும் விதிவிலக்கல்ல.

aa

கோவில் திருவிழா, குடும்ப விசேஷங் கள் என எல்லா நிகழ்ச்சிகளிலும் மது விருந்துதான் களைகட்டிவருகிறது. நண்பர்கள் மட்டுமின்றி, மாமன்- மைத்துனன், அண்ணன்- தம்பி என்ற உறவுகள்கூட கூடிக்குடிக்கிறார்கள். குடும்பப்பிரச்சினை, கலவரம், தற்கொலை, எய்ட்ஸ் நோய் போன்றவற்றால் இறப் பவர்களைவிட மிக அதிக அளவில் மதுவி னால் இறக்கிறார்கள். இதை உலக சுகாதார நிறுவனம் ஆய்வுசெய்து வெளியிட்டுள்ளது. 2016-ல் எய்ட்ஸால் 1.8 சதவிகிதம் பேரும், சாலைவிபத்தில் 2.5 சதவிகிதம் பேரும், கலவரத்தினால் 0.8 சதவிகிதம் பேரும் இறந்த னர். ஆனால் மதுவினால் மட்டும் 5.3 சவிகிதம் பேர் இறந்துள்ளனர். 2016-ல் உலக அளவில் மதுவினால் 30 லட்சம் பேர் இறந்துள்ளனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மதுக்கடைமூலம் அரசுக்கு ஆண்டு வருமானம் சராசரியாக 27 ஆயிரம் கோடி ரூபாய். 2008-09 ஆண்டில் பத்தாயிரம் கோடி வருவாய், 2016-17-ல் 16 ஆயிரம் கோடி வருவாய், 2018-ல் 28 ஆயிரம் கோடி என வருவாய் அதிகரித்தபடியே உள்ளது. இதன்மூலம் குடிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு ராக்கெட் வேகத்தில் உயர்ந்துகொண்டே போகிறது. தமிழகத்தில் 2.5 கோடி பேர் மதுப்பிரியர்கள். இதில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்- அடுத்து 30 வயதுக்குட்பட்டவர்கள்தான் அதிகம் என்கிறது புள்ளிவிவரம்.

Advertisment

மதுவால் குடும்பச் சீரழிவும், பள்ளி, கல்லூரிப் பிள்ளைகளின் படிப்பும் பாழாகிவருகிறது. திறமையுள்ள பல மனிதர்கள் மதுவினால் அழிந்துபோவதால் மனித வளம், உழைப்பு பாழாகிறது. இப்படி மது அரக்கனின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வரும் தமிழக மக்களைக் காப்பாற்ற பல நல்ல மனிதர்கள் தங்கள் உயிரைக்கொடுத்தும் போராடி வருகிறார்கள். மது இல்லா தமிழகத்தை உருவாக்க- மதுவுக்கு எதிராக பலர் பல இயக்கங்களை உருவாக்கிப் போராடிவரும் நிலையில், தெய்வமும் தன் பங்கிற்குப் போராடிவருகிறது. ஆம்; தீராத மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்டுவருகிறார் கள் கொஞ்சிக்குப்பம் அய்யனார், வீரபத்திரர் ஆகிய தெய்வங்கள்.

aa

இவ்வாலயத்தில் பூரணி, பொற்கலையோடு அய்யனார் நடுநாயகமாக வீற்றிருக்கிறார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாலயப் பூசாரி ஒருவர் குடிபோதைக்கு அடிமை யான ஒருவரை அய்யனாரின் அனுமதியோடு வீரபத்திரசாமி முன்பு அமரவைத்து, "இனி குடிக்க மாட்டேன்' என்று சத்தியம் செய்யச்சொல்லி−, சாமி முன்புள்ள சிவப்புக் கயிறை அவரது வலது கையில் கட்டிவிட்டார். அப்போது முதல் அந்த மனிதர் குடிப்பதையே மறந்துபோனா ராம். இந்த செய்தி மக்கள் மத்தியில் பரவியது. அன்று முதல் கொஞ்சிக்குப்பம் அய்யனார், வீரபத்திர சாமிகள் புகழ் பரவ ஆரம்பித்தது.

Advertisment

இதுபற்றி கோவில் பரம்பரை அறங்காவலர் செல்வராசுவிடம் கேட்டோம். ""ஒரு காலத்தில் கொஞ்சிமரங்கள் சூழ்ந்த காடாக இருந்துள்ளது இப்பகுதி. அந்தக் காட்டைத் திருத்தி எங்கள் முன்னோர்கள் இங்கு குடியேறியுள்ளனர். அதனால் ஊருக்கு கொஞ்சிக்குப்பம் என்று பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் எனது தந்தை அழகப்படையாச்சி இக்கோவிலையும், இங்குள்ள விநாயகர், அய்யனார், வீரபத்திரர் மற்றும் பரிவார தெய்வங்களாக துர்க்கை, மாரியம்மன், முருகன் ஆகியோரைப் பிரதிஷ்டை செய்தார். ஊர்மக்கள் வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் வெளியூரி−ருந்தும் வந்து வழிபட ஆரம்பித்தனர். தற்போது ஆலயம் இந்து சமய அறநிலையத்துறையின் பராமரிப்பில் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. பரம்பரை தர்மகர்த்தா வகையில் இப்போது நான் இருந்துவருகிறேன். இங்குவரும் பக்தர்களுக்கு தினசரி மதியம் அன்னதானமும் வழங்கப்படுகிறது'' என்றார் அவர்.

aa

கோவில் பூசாரி பார்த்தசாரதி, ""இக்கோவில் தெய்வங்கள் சக்திமிக்கவை. அய்யனாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் கேட்டது கிடைக்கும்; நினைத்தது நடக்கும். மதுபோதைக்கு அடிமையானவர்கள் அதி−ருந்து மீண்டுவர இங்குள்ள அய்யனாரின்முன்பு வணங்கி, பின்பு 50 ரூபாய் பணம் கட்டி ரசீது வாங்கிச்சென்று வீரபத்திரசாமிக்கு அர்ச்சனை செய்தபின்பு அவர்முன் அமர்ந்து உறுதிமொழி எடுக்கவேண்டும். "ஆகாயம், பூமாதேவி, வீரபத்திரசாமி சாட்சியாக, என்னைப் பெற்ற தாய்- தந்தைமீது சத்தியம் செய்கிறேன். இனிமேல் எப்போதும் குடிக்கமாட்டேன்' என்று மூன்றுமுறை உறுதிமொழி எடுத்து சத்தியம் செய்வார்கள். அதன்பிறகு அவர்கள் கையில் வீரபத்திரசாமியின் சிவப்புக் கயிறு கட்டப்படும். இப்படி கட்டியபிறகு பெரும்பாலும் யாரும் குடிக்கமாட்டார்கள். அதையும் மீறி குடிப்பவர்கள் உடல்நிலை பாதிக்கப்படும். சில ஆயிரம்முதல் பல லட்சம்வரை செலவுசெய்ய நேரிடுகிறது. இதை அனுபவப்பூர்வமாகப் பார்த்தவர்கள் மீண்டும் குடிப்பதில்லை. இங்குவந்து கயிறு கட்டியபிறகு மதுவைமறந்து நல்லமுறையில் வாழ்கிறார்கள். இப்படி பல்லாயிரம் குடும்பங்கள் நிம்மதி அடைந்துள்ளன. இதன் பலனை அறிந்தவர்கள் மற்றவர்களிடம் சொல்ல, தினசரி சுமார் 200 பேர்களுக்குமேல் கயிறுகட்ட இங்கு வந்தவண்ணம் உள்ளனர். காலைமுதல் மாலைவரை எல்லா நாட்களிலுமே கோவில் திறந்தி ருக்கும்.

மதுப்பழக்கத்தைத் தடுப்பதோடு, இங்குவந்து வணங்குகிறவர்களுக்கு திருமணத்தடை நீக்கம், குழந்தைப் பேறு, திருட்டுப்போன பொருட்கள் கிடைத்தல் என அனைத்தும் நிறைவேறுகின்றன. உதாரணமாக, அன்னவல்− கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்குத் திருமணமாகி இருபது ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இங்குவந்து வேண்டுதல் செய்தபிறகு குழந்தை பிறந்துள்ளது. நெய்வேலி− டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த என்.எல்.சி ஊழியர் வீட்டில் 45 பவுன் நகை திருட்டுப்போனது. இங்கு வந்தபிறகு சில நாட்களுக்குள் அந்த நகைகள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ளது. பல்வேறு ஆண்- பெண்களுக்குத் திருமணத்தடை நீங்கி திருமணம் நடந்துள்ளது. எங்கள் கொஞ்சிக்குப்பம் அய்யனார், வீரபத்திர சாமிகளின் பெருமை தமிழக அளவில் பரவியுள்ளது என்பதற்கு தினசரி சென்னை உட்பட பல மாவட்ட மக்கள் இங்குவந்து வழிபட்டுச் செல்வதே சாட்சி'' என்கிறார்.

"பலரது உடல்நிலை பாதிப்பதோடு இறப்பதும், குடும்பங்கள் சீரழிவதும், பல குற்றங்கள் நடப்பதும் மதுவினால் தான். மனிதனால் மாற்றமுடியாத அந்தப் பழக்கத்தை தெய்வம் மாற்றுகிறது' என்று மெய்சி−ர்ப்போடு பேசுகிறார்கள் ஊர்மக்கள்.

அமைவிடம்: மதுவுக்கு அடிமையானவர்களை மீட்கும் அய்யனார் ஆலயம் விக்கிரவாண்டி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், பண்ருட்டிக்கு தெற்கே 11 கிலோமீட்டரிலும், வடலூருக்கு வடக்கே 13 கிலோமீட்டரிலும் சாலையை ஒட்டி அமைந்துள்ளது.